இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | உற்சாக வரவேற்பு | 8 PM | 10-07-2026
கரூரில் 2025 செப்., 7ல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். அதன் பின் 285 நாட்களாக கரூர் செல்லாத நிலையில் முதல்வரான பின் முதல் முறையாக விஜய் இன்று கரூர் சென்றார். கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை அருகே தனியார் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் 5,000 பேர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றினார். தொடர்ந்து ரோடு ஷோ சென்ற முதல்வர் விஜய், விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். பின் கலெக்டர் ஆபிசில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். மனவாசி ஊராட்சியில் 1,700 கோடி, தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத் திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த தொழிற்சாலையால் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோரின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு துறைகளில் தற்காலிக பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஈரோட்டை சேர்ந்த சாந்திக்கு 10 லட்ச ரூபாய்க்கான கருணை தொகையை முதல்வர் வழங்கினார். பணி நியமன ஆணை வழங்கிய போது முதல்வர் கண் கலங்கியதாக அதை பெற்றவர்கள் கூறினர்.