உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள்| முதல் கட்ட அமர்வு நிறைவு | 8 PM | 13-02-2026 | DINAMALAR

இன்றைய இரவு முக்கியச் செய்திகள்| முதல் கட்ட அமர்வு நிறைவு | 8 PM | 13-02-2026 | DINAMALAR

பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 28 ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் துவங்கியது. பிப்.,1ல் 2026 - 27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தொடரில் சீன ஆக்கிரமிப்பு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிப். 4ல் லோக்சாபாவில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்ததால் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் கூறியதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார். பார்லிமெண்டில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கைகள் தொடர்பான விடியோக்களை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. தொடர்ந்து இன்றும் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், ராணுவ முன்னாள் தளபதி நரவணேவின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவை குறித்து விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பார்லிமெண்டில் இரு அவைகளும் முடங்கின. தொடர்ந்து மார்ச் 9 ஆம் தேதிக்கு பார்லிமெண்டின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர்கள் தனித்தனியே அறிவித்தனர். இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இரண்டாம் அமர்வு மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது.

பிப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை