உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | புதிய கட்சி துவங்கிய ஓபிஎஸ் | 8 PM | 14-12-2025

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | புதிய கட்சி துவங்கிய ஓபிஎஸ் | 8 PM | 14-12-2025

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கினார். தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அவர் டிச.15ல் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தார். பின் அந்த கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தார். டிச.24ல் எம்ஜிஆர் நினைவு தினத்தில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பதாக தெரிவித்தார். இந்த சூழலில் புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கி உள்ளார். தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என கட்சியாக மாற்றி இருக்கிறார். ஆனால் அவர் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அமைப்பை கழகமாக மாற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கட்சி தலைவர், பொது செயலாளர் யார் உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை. எப்போதும் போல கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் என்ற தமது பொறுப்புகளை குறிப்பிட்டுள்ளார். கட்சியை அவர் முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்துவிட்டாரா என்பது குறித்தும் தகவல் இல்லை. கழகமாக மாற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் இதற்கு முன் இருந்த தலைமை கழக முகவரியும் மாறி இருக்கிறது.

டிச 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி