உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | திட்டமிட்டு தடுத்தது திமுக | 8 PM | 18-04-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | திட்டமிட்டு தடுத்தது திமுக | 8 PM | 18-04-2026

ோவை கொடிசியாவில் நடந்த என்டிஏ கூட்டணி பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றினார். முதலில் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின் பேசிய அவர், சாதாரண குடும்பங்களை சேர்ந்த பெண்களும் பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு வர வேண்டும் என மத்திய பாஜ அரசு முயற்சி எடுத்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கும்படி அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதினேன். இதன் மூலம் கிடைக்கும் பெருமையை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் எனவும் தெளிவாக கூறினேன். இந்த மசோதா நிறைவேறியிருந்தால், சாதாரண குடும்பங்களை சேர்ந்த அதிகப்படியான பெண்கள் அதிகாரம் பெற்றிருப்பர். ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்தன. அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத எம்பி தொகுதிகளை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுத்தும், மக்களை குழப்பும் வகையில் பொய்யான தகவல்களை திமுக திட்டமிட்டு பரப்பி வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை கிடைக்கவிடாமல் தடுத்தது ஏன் என திமுகவினரிடம் கேளுங்கள். வரும் 23ம் தேதி பெண்கள் இதற்கான சரியான பதிலடியை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்

ஏப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை