உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 19-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 19-05-2025 | Short News Round Up | Dinamalar

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இந்தியாவின் பதிலடிகளை தாங்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் கேட்டு கெஞ்சிய நிலையில், இந்தியா - பாக்., இடையே கடந்த மே 10ல் திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. போர் நிறுத்தம் தொடர்பாக பார்லி சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும்; விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. எந்த சூழ்நிலையில் இந்தியா போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்நிலையில், வெளியுறவு துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டம் பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக உள்ள எம்.பி., க்கள் சசிதரூர், அசாதுதீன் ஓவைசி, அபராஜிதா சாரங்கி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பார்லிமென்ட் குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். இந்தியா - பாக்., இடையே போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கி கூறினார்.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !