உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 20-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 20-02-2025 | Short News Round Up | Dinamalar

டில்லி சட்டசபை தேர்தலில் வென்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஷாலிமர் பாக் தொகுதியில் வென்ற ரேகா குப்தா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் டில்லியின் புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ரேகா குப்தாவுடன் 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. உள்துறை, நிதி, விஜிலென்ஸ் மற்றும் திட்ட துறைகளை முதல்வர் ரேகா குப்தா கவனிப்பார். துணை முதல்வராக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள பர்வேஷ் வர்மாவுக்கு, கல்வி, பொதுப்பணி, போக்குவரத்து துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மஞ்சிந்தர் சிங் சிர்சா Manjinder Singh Sirsa சுகாதாரம், நகர வளர்ச்சி, தொழில் துறைகளின் அமைச்சராக செயல்படுவார். அமைச்சர் ரவீந்தர குமார் இந்த்ராஜ், சமூக நலம், தொழிலாளர் நலம் மற்றும் எஸ்சி-எஸ்டி நடவடிக்கைகள் துறைகளை கவனிப்பார். குடிநீர், சுற்றுலா, கலாசார துறைகள் அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கும், வருவாய், சுற்றுச் சூழல், உணவு மற்றும் குடிமை வழங்கல் துறைகள் அமைச்சர் அஷிஷ் சூட்டுக்கும் Ashish Sood ஒதுக்கப்பட்டுள்ளன.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ