உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பிரசாரம் ஓய்ந்தது |பட்டாசு வெடி விபத்து | 8 PM | 21-04-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பிரசாரம் ஓய்ந்தது |பட்டாசு வெடி விபத்து | 8 PM | 21-04-2026

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் வரும் 23ம் தேதி ஓட்டுபதிவு நடக்க உள்ளது. இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டது. இங்கு ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை என மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆந்திரா, கர்நாடகா எல்லையை ஒட்டி வருகிறது. அங்கிருந்தும் இருந்தும் மது கடத்தி வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் தமிழக எல்லையிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் துாரத்திற்கு கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளை மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து கிருஷ்ணகிரி மட்டுமல்லாது, அதனை ஒட்டி உள்ள அண்டை மாநிலங்களில் உள்ள மது கடைகளும் மூடப்பட்டது. கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்லூர், மாயசந்திரா, பிதுருகுப்பே, ஹெஸ்ட்லைன் பகுதியில் 60 மது கடைகள் மூடப்பட்டன. இந்த உத்தரவு வரும் 23ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

ஏப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை