உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 21-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 21-11-2024 | Short News Round Up | Dinamalar

சென்னையில் கடந்த 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அப்போது, தெலுங்கு மக்கள் குறித்து அவர் சொன்ன கருத்து சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது தெலுங்கு மக்கள் அளித்த புகாரின்பேரில், சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்துாரியை தனிப்படை போலீசார் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 29ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ரகுபதி ராஜா உத்தரவிட்டார். ஜாமின் கேட்டு எழும்பூர் கோர்ட்டில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று மாலை கஸ்தூரி புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறை வாசலில் அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தியும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி