/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | படையெடுக்கும் மக்கள் | 8 PM | 22-04-2026
இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | படையெடுக்கும் மக்கள் | 8 PM | 22-04-2026
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இதேபோல், ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. கிளாம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஏப் 22, 2026