உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பாஜவில் ஐக்கியம் | உதயநிதியை இறுக்கும் ஐடி!| 8 PM | 24-04-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பாஜவில் ஐக்கியம் | உதயநிதியை இறுக்கும் ஐடி!| 8 PM | 24-04-2026

விருதுநகர் கட்டனார்பட்டி கிராமத்தில், கோவிந்தநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துமாணிக்கத்துக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்படுகிறது. கடந்த 19ம் தேதி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 தொழிலாளர்கள் உடல் கருகி மரணம் அடைந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர். பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. விருதுநகர் கோர்ட்டில் சரண் அடைந்த உரிமையாளர் முத்துமாணிக்கம், 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. விபத்து தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், விருதுநகர் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களின் உடல்நிலை, வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ