உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / ெய்தி சுருக்கம் | 08 AM | 24-07-2025 | Short News Round Up | Dinamalar

ெய்தி சுருக்கம் | 08 AM | 24-07-2025 | Short News Round Up | Dinamalar

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் புறப்பட்டு சென்றார். லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏர்போர்ட்டில் திரண்டிருந்த இந்தியர்கள், மேள தாளங்கள் முழங்க, கையில் தேசியக்கொடி ஏந்தி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி, பிரிட்டன் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் பிரிட்டன் மன்னர் 3-ம் சார்லசையும் சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பிரிட்டனில் தரை இறங்கிவிட்டேன். எனது இந்த பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை முன்னேற்றுவதில் நீண்ட தூரம் செல்லும். நமது மக்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும். உலகளாவிய முன்னேற்றத்துக்கு வலுவான இந்தியா, பிரிட்டன் நட்புறவு அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரிட்டன் பயணத்தை முடித்துவிட்டு மோடி, நாளை மாலத்தீவு செல்கிறார். அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அழைப்பின்பேரில் 2 நாள் பயணம் மேற்கொள்ளும் மோடி, அந்நாட்டின் 60வது சுதந்திர தின கொண்டாட்டங்களிலும் பங்கேற்கிறார்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை