ெய்தி சுருக்கம் | 08 PM | 08-06-2025 | Short News Round Up | Dinamalar
1975ல் காங்கிரஸ் ஆட்சியின்போது, பிரதமராக இருந்த இந்திரா, எமர்ஜென்சியை அமல்படுத்தினார். இது நாடு முழுதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்த்து குரல் எழுப்பிய எதிக்கட்சி தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. 1975 ஜூன் 25ம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி 21 மாதங்கள் நீடித்தது. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாளாக அரசு அனுசரிக்கிறது. ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக கருதப்படும் இந்த நாளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடி, எமர்ஜென்சிக்கு எதிர்ப்பும் கண்டனத்தையும் பதிவு செய்தது. ஜனநாயகத்தை காக்க போராடிய தியாகிகளை கவுரவிப்பதாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அரசியல்சாசனம் படுகொலை நடந்தது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஜனநாயகத்தை காக்க போராடிய பலர் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். ஜனநாயகத்தின் தாய் என்ற வகையில் இந்தியா எப்போதும், ஜனநாயக உரிமைகளை காக்கவும், போற்றவும் துணை நிற்போம் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.