இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | சிறுமிகள் புகைப்படங்கள் | 8 PM | 25-09-2026
உத்தரப்பிரதேசம் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சி துவங்கியுள்ளது. துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி, சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, கான்பூர் பகுதிகளுக்கு முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை பரிசுகளாக தந்துகொண்டு இருக்கின்றன. இந்த மாற்றம் ஒரு நல்ல அறிகுறி. உத்தரப்பிரதேசம் அமேதியில் தயாரிக்கப்படும் ஏகே 203 ரக துப்பாக்கிகள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளின் தூக்கத்தை கெடுக்கின்றன. உலக அளவில் நிகழும் பல்வேறு நிலையற்ற தன்மைகளுக்கு மத்தியில் நம் நாடு பொருளாதாரத்தை வலுப்படுத்தி இருக்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தியதற்கு பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளே காரணம் என்று அமித் ஷா கூறினார்.