செய்தி சுருக்கம் | 08 PM | 26-02-2025 | Short News Round Up | Dinamalar
கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பாஜ அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். பின்னர், வணக்கம் நமஸ்காரம் என கூறி அமித்ஷா தனது உரையை துவங்கினார். திமுகவின் தேச விரோத ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. 2026ல் தமிழகத்தில் நமது ஆட்சி உருவாக போவது உறுதி. தமிழகத்தில் நிலவும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும். ஊழல் செய்வதில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றுள்ளனர். லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது. கூடுதல் இடங்கள் கிடைக்குமே தவிர, குறையாது. பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது என அமித்ஷா பேசினார்.