இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | சீனா வந்த பிரதமர் மோடி |8 PM | 30-08-2025
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று ஜப்பான் சென்றார். தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் இடையிலான வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம், பாதுகாப்பு முதலியன குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜப்பான் நாட்டில் இருந்து சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 2-வது நாளான இன்று மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜப்பான் நாட்டின் 16 மாகாண கவர்னர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர் அவர், தியான்ஜின் நகரில் நாளை , நாளை மறுதினம் நடக்கும் ஷாங்காய் மாநாட்டுக்காக சீனா புறப்பட்டார். இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முடிந்த ஜப்பான் பயணம் கண்டிப்பாக நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சீனா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு தியான்ஜின் விமான நிலையத்தில் நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை துவங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் உள்பட பத்து நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என தெரிகிறது. ShanghaiSummit #China #JapanVisit #PMModi #InternationalRelations #Diplomacy #GlobalSummit #AsiaPacific #BilateralTalks #EconomicPartnership #LeadershipSummit #CulturalExchange #SustainableDevelopment #TradeRelations #RegionalCooperation #Asia #WorldEvent #Geopolitics #ForeignPolicy