இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பரிசளித்த மோடி | 8 PM | 30-06-2026
மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் தலைவர்களுக்கு வழங்கிய அன்பளிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மோடி சுற்றுப்பயணம் செய்யும்போது அந்த நாட்டின் தலைவர்களுக்கு அன்பு பரிசுகள் வழங்கிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் செஷல்ஸ் தலைவர்களுக்கு இந்தியாவின் கலை, பாரம்பரியம், நூற்றாண்டு பழமையான கைவினைத்திறனை வெளிப்படுத்தும் பரிசுகளை வழங்கியிருக்கிறார் மோடி. செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினிக்கு Patrick Herminie உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் புகழ்பெற்ற கைவினைப் பொருளான மொரதாபாத் பித்தளை ஆமையை அன்பளிப்பாக மோடி வழங்கியிருக்கிறார். அதிக ஆண்டுகள் வாழக்கூடிய ஆல்டாப்ரா ஆமைகள் செஷல்ஸ் நாட்டின் தனித்துவமாக விளங்குகின்றன. அதனை குறிக்கும் வகையில் இந்த பித்தளை ஆமையை மோடி பரிசாக வழங்கியிருக்கிறார் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியின் மனைவி வெரோனிக்-கிற்கு Veronique மகேஸ்வரி பட்டு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பழங்கால உலோகக் கைவினை பொருட்கள் அடங்கிய பெட்டியை மோடி பரிசாக வழங்கினார். மத்திய பிரதேசத்தின் மகேஷ்வரில் கைத்தறி நெசவு மூலம் நுணுக்கமான கைவினை வேலைப்பாடுடன் நெய்யப்படுதவே மகேஸ்வரி பட்டாகும். அதேபோல் செசல்ஸ் துணை ஜனாதிபதி செபாஸ்டியன் பிள்ளைக்கு Sebastien Pillay சிக்கிமில் இருந்து கொண்டு சென்ற ஓவியத்தை மோடி பரிசளித்துள்ளார். செஷல்ஸ் துணை ஜனாதிபதியின் மனைவி லீனா பிள்ளைக்கு Lina Pillay தமிழர் பாரம்பரியமான காஞ்சிபுரம் பட்டாடைகளை பரிசாக வழங்கிவிட்டு வந்திருக்கிறார் மோடி. மேலும் செஷல்ஸ் பார்லிமென்ட் சபாநாயகர் அஸரெல் எர்னெஸ்டாவுக்கு, Azarel Ernesta நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் தோடா சமூகத்தினரால் தயாரிக்கப்படும் சால்வையை பரிசளித்துள்ளார் மோடி. செல்லும் இடமெல்லாம் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்ற தவறாத பிரதமர் மோடி செஷல்ஸ் பயணத்தின்போது தமிழர் கட்டிய விநாயகர் கோயிலுக்கும் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Narendra_modi #PM_Modi #Seychelles #Modi_Gifts #Gidts_to_leaders #Kanchipuram_silk #Kanchi_pattu #Maheswari_silk #Sikkim_Painting #Brass_tortoise #Modi_temple_visit