உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | மோடி வேண்டுகோள் | 8 PM | 30-08-2025

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | மோடி வேண்டுகோள் | 8 PM | 30-08-2025

மன் கி பாத் என்ற மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் தொடர் மழையால் பேரழிவு ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார். இந்த மழைக்காலத்தில், இயற்கை பேரழிவுகள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் அழிவை கண்டிருக்கிறோம். வீடுகள் இடிந்து விழுந்தன, வயல்கள் மூழ்கின, குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. எங்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ, அங்கெல்லாம் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பிற பாதுகாப்பு படையினர் மக்களை காப்பாற்ற இரவும் பகலும் உழைத்தனர். இந்த கடினமான காலத்தில் மனிதநேயத்திற்கு முன்னுரிமை தந்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. வெள்ளம் மற்றும் மழையின் பேரழிவுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு சிறப்பு நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. புல்வாமா மைதானத்தில் முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி முதல் முறையாக நடந்திருக்கிறது. இது முன்பு சாத்தியமற்றதாக இருந்தது. இப்போது நாடு மாறி விட்டது. இரண்டாவது நிகழ்வு, நாட்டின் முதல் கேலோ இந்தியா நீர் விளையாட்டு ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் இருந்து 800க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த விளையாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி. அவர்களுக்கு என் பாராட்டுகள். யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்தவர்களிடமிருந்து பல ஊக்கமளிக்கும் கதைகளை நாம் கேட்டிருப்போம். இந்த இளைஞர்கள் கடினமான சூழ்நிலைகளில் படித்து, கடின உழைப்பின் மூலம், இந்த பணியில் இடம் பெறுகின்றனர். ஆனால் பலர் மிக சிறிய வித்தியாசம் காரணமாக யுபிஎஸ்சி இறுதி பட்டியலுக்கு வர முடியாமல் போய் விடுகின்றனர். அவர்களை பற்றிய விவரங்கள் மத்திய அரசின் பிரதிபா சேது என்ற டிஜிட்டல் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த இளைஞர்களின் விவரங்கள் இதில் கிடைக்கின்றன. இவற்றை பார்த்து தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. இதனால் பலர் வேலை பெற்று வருகின்றனர். இப்போது பண்டிகை காலம் வந்துவிட்டது. நாம் உள்ளூர் பொருட்களை வாங்க மறுந்துவிட கூடாது. எந்த பொருளாக இருந்தாலும் அது நம் நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் இப்போது இந்திய கலாசாரம் பரவி வருவதை பார்க்கிறோம். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் ராமாயணம் தொடர்பான ஓவிய கண்காட்சி நடந்திருக்கிறது. இத்தாலியில் மகரிஷி வால்மீகி சிலை மற்றும் கனடாவின் மிசிசாகா நகரத்தில் ராமர் சிலை திறக்கப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். #Modi #Mankibaat #IndiaCulture #VocalForLocal #DesiVibes #CulturalHeritage #SupportLocal #IndianTraditions #ProudIndian #SocialChange #UnityInDiversity #EmpoweringCommunities #MakinIndia #LocalArtisans #CulturalCelebration #VoiceOfThePeople #Changaai #IndigenousCreativity #TraditionMeetsModernity

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ