உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் | 16-07-2026 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 16-07-2026 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 16-07-2026 | District News | Dinamalar

ஜூலை 16, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Chandhra Mouleeswaran MK
ஜூலை 17, 2026 08:50

அது அரிதான கால்நடை இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி பதிவான பிறகு அந்தக் கால்நடை ஆயுள் முடியும் வரை அல்லது பாலிஸி முதிரும் வரை நீங்கள் தொடர்ந்து பாலிஸியைப் பராமரிப்பீர்களா?


Chandhra Mouleeswaran MK
ஜூலை 17, 2026 08:44

தினமலரே இந்தக் கட்டுரையைத் தயவு செய்து முழுதாக வெளியிட்டு உதவுவாயாக வெண்மைப் புரட்சிக்கு உதவும் கால்நடைகளுக்கு உதவும் புண்ணியம் உனக்குக் கிடைப்பதாக கால்நடை இன்ஷ்யூரன்ஸ் என்பது கடந்த காலத்தில் காமராஜர் ஆட்சிக்காலத்திலேயே அறிமுகம் ஆனது. ஆனால் இன்ஷ்யூர் செய்யப்பட்ட கால்நடை உயிருடன் இருந்து அதற்கான் ப்ரீமியம் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்தால் அந்தப் பாலிஸியின் முதிர்வு ஆண்டில் ஒரு தொகை கிடைப்பதாக இருந்தது. ஆனால் நோயாலோ விபத்தாலோ மூப்பாலோ அது இறந்தால்தான் அந்த இன்ஷ்யூரன்ஸ் ஒரு பெரிய தலைவலியாக மாறியது. இறந்தவுடன் சவப்பரிசோதனை செய்யவும் அதை முன்னின்று பரிந்துரைக்கவும் கால்நடை மருத்துவரும் இன்ஷ்யூரன்ஸ் அதிகாரியும் அந்தச் சமயத்தில் கிடைக்கவே மாட்டார்கள் ஒரு மாடு இறந்தால் மூன்று அல்லது நான்கு மண் நேரத்திற்குள் அதைப் புதைத்து விடவேண்டும். இல்லாவிட்டால் அதன் இரைப்பை வாயுக்களால் உப்பிச் சற்று நேரத்தில் வெடித்து விடும்., அதன்பின் அதை அப்புறப் படுத்த முடியாது. அதற்குள் சவப்பரிசோதனை செய்தால்தான் அதன் சாவு அங்கீகாரம் பெறும். அதன்பின்னும் அதற்கான இன்ஷ்யூரன்ஸ் தொகை கைக்கு வருவதற்குள் இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்ட்டும் அலுவலகமும் சான்றிற்கு மேல் சான்று கேட்டு எங்களை அலைக்கழிப்பார்கள். கமிஷன் என்று ஒரு கணிசமான தொகையை ஏஜண்ட்டிற்கு லஞ்சமாகக் கொடுத்தால்தால் அந்தப் பாலிஸி பணமாக மாறும் அப்படி அலைவதால் அன்றாட வேலைகள் கெடுவதால் ஒற்றை விவசாயி வெறுத்துப் போய்க் கைவிட்டு விடுவார். அந்தத் தொகை அலுவலகத்தில் கரைந்து போயிருக்கும் அதனால் சவப்பரிசோதனையும் சான்றளிப்பும் நான்கு மணி நேரத்தில் முடித்துக் கொடுப்பதற்கும் பாலிஸியின் முதிர்வுத் தொகையோ இழப்பீட்டுத் தொகையோ அன்றைக்கே விவசாயிக்குக் கிடைப்பதற்கும் சட்ட ரீதியாக பாதுகாப்புத் தராமல் கால்நடை இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தை அறிவிப்பது பயன் தராது. இது எங்கள் சொந்த அநுபவம் கரைந்தது போகக் கைக்குப் பணம் வர ஆறுமாதங்களுக்கு மேல் ஆனது. பதிவு செய்த ஏஜண்ட் வேறு ஊருக்குப் போய் விட்டார். இதில் மற்றொரு பெரிய குறையும் இருந்தது. பதிவு செய்த மருத்துவர்தான் கால்நடை இறந்ததும் அதை அடையாளம் காட்டிச் சான்றளித்து தற்போது இருக்கும் மருத்துவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் எனும் விதி இருந்தது. அப்போதுதான் அவருக்கு அவர் விற்ற பாலிஸிக்கான போனஸ் அவருக்குக் கிடைக்கும் பணியிடம் மாறிச் சென்று விட்ட அதே மருத்துவரை நாங்கள் தான் தேடிப் பிடிக்க வேண்டிய கஷ்டம் கால்நடை இன்ஷ்யூரன்ஸ்காரர்கள் அந்த வேலையைத் துறை ரீதியாக அணுகி அந்த மருத்துவரை வரவழைப்பதில்லை. அந்த நிலையில் நாங்கள் மூன்று துறையினரையும் போய்ப்பார்த்து ஒன்று சேர்க்க வேண்டும். இடையில் கிராம நிர்வாக அலுவலரைக் கண்டுபிடித்துக் கால்நடை இறந்ததைப் பதிவு செய்து அப்புறப் படுத்த வேண்டும். தோட்டத்திற்குள்ளேயே புதைத்தாலும் அனுமதி பெறவேண்டும். சவத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது. முன்பு எல்லாம் இறந்த கால்நடைகளை மற்றவர்கள் கறிக்காக எளிய விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்களே பத்துப் பேர் கூடிக் குழி எடுத்துச் சவ அடக்கத்தையும் செய்து தந்தார்கள். பசுவதைத் தடைச் சட்டத்தாலும் இறந்த கால்நடையை உணவாக்கக் கூடாது என்பதாலும் இப்போது கால்நடையை அப்புறப் படுத்துவது எளிதான காரியம் அல்ல புதைப்பதற்கு எட்டு அல்லது பத்து அடிக் குழி தோண்ட வேண்டும். அதற்கு ஆட்கள் வரமாட்டார்கள். ஜேசிபி தான் வரும். அவர்களும் இறந்த மாட்டை அந்த இயந்திரத்தால் தொட்டுத் தூக்க மாட்டார்கள். நாங்கள் தான் பக்கத்து ஆட்களை அழைத்து அதைத் தூக்க வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை