உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ்  | 14 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar 

தினமலர் எக்ஸ்பிரஸ்  | 14 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar 

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். காலனித்துவ முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். கோவை அன்னபூர்ணா ஓட்டல் ஓனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் அவரே விரும்பியதால் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பாஜவுக்கும், அமைச்சர் தரப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஹெச் ராஜா சொன்னார். எடப்பாடி சட்டசபை தொகுதியில் 7 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். அதிமுக ஆட்சியில்தான் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன என்றார்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ