தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் டெல்லி புறப்பட்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். இந்தியா வம்சாவழியினர், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை தயாரிக்கும் ஒப்பந்தத்தை BEML நிறுவனம் பெற்றுள்ளது. எட்டு பெட்டிகள் கொண்ட இரண்டு புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளது. புல்லட் ரயில் தயாரிப்பு பணிகள் முடித்து 2026ல் ரயில்வேக்கு அளிக்கப்படும் என BEML நிறுவனம் கூறியது. டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் திருத்தத்தில் ஜிஐஎஸ் முறையில் இயங்கும் மென்பொருளை பயன்படுத்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் குரூப் 2 முதன்மை தேர்வில் அமலாகும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.