தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 OCT 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
கிண்டி ரேஸ் கிளப்பில், 4832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேகரிக்கும் வகையில், புதிதாக 4 குளங்கள் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இப்ப பணிகளை முடிக்க மாநகராட்சி தீவிரம்காட்டி வருகிறது. ஜம்மு காஷ்மீர்ல் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணி 52 தொகுதிகளிலும், பாஜ 28 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 2, ஆம் ஆத்மி ஒரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவங்கியது. பாஜ 46 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும், பிற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்தது. மேட்டூர் அணைக்கு 15710 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 11208 கன அடியாக குறைந்துள்ளது. விமானப்படை வீரர்களைப் போற்றி கெளரவிக்கும் விதமாக இன்று விமானப்படை நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.