தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 OCT 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin பருவ மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வேளச்சேரி ஃபை பர்லாங் சாலையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சொந்தமான 200 அடி நீள சுவர் மண் அரிப்பால் இடிந்து விழுந்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலை மூடப்பட்டு ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் கோபாலபுரத்தில் உள்ள திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டை வைத்து இருந்தாலும் அதனையும் மீறி மழைநீர் உள்ளே சென்றது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கன மழை பெய்தது. அளக்கரை சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டன. மாநில நெடுஞ்சாலை துறையினர் பொக்லின் உதவியுடன் பாறைகளை அகற்றினர். அதைதொடர்ந்து கோடமலை சாலையோரத்தில் மரங்கள் விழுந்தன. நெடுஞ்சாலைதுறையினர் அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது.