தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 OCT 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தென்காசி வந்தார். இன்று காலை செங்கோட்டை அரசு ஆஸ்பிடலுக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். நோயாளிடம் சிகிச்சை முறைகள் குறித்தும், ஆஸ்பிடலில் வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 58720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 7340 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 112 ரூபாய்க்கும் ஒரு கிலோ ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மஹாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. பாஜ, ஷிண்டே சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் முதல் கட்டமாக 45 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை ஷிண்டே சிவசேனா அறிவித்துள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி-பச்பாக்டி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே பாஜ 99 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.