தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 NOV 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி கோலாப்பூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து என்சிபி பவார் பிரிவு தலைவர் சரத் பவார் பிரசாரம் செய்தார். கொட்டும் மழையில் நனைந்தபடி அவர் பேசியதால் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார். அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் தற்போதைய திமுக ஆட்சியில், மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குடிநீர் வரி 6 மடங்கு உயர்ந்துள்ளது. இதை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த ஆட்சி நமக்கு தேவையா என கேள்வி எழுப்ப வேண்டும் என்றார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், தேவ் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கங்கை கரை முழுதும் வண்ண மின் விளக்குகளாலும், தீபங்களாலும் மின்னியது. இங்கு நடந்த விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் டமரு எனப்படும் பெரிய வகை உடுக்கை வாத்தியம் வாசித்து மகிழ்ந்தனர்.