தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 NOV 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கோயில் யானைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடையது என அவர் கூறினார். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் சபரிமலை பக்தர்களுக்கு தமிழக தேவசம் சார்பில் பிஸ்கட் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சபரிமலையில் அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மீண்டும் ஆட்சி அமைக்கும் ராசி திமுகவிற்கு கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். திமுக 13 ஆண்டுகள் வனவாசம் இருந்ததோ அதேபோல் நிரந்தரமாக வனவாசம் அவர்களுக்கு ஏற்படும் என அவர் கூறினார்.