உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் 4 மணி | 06-10-2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் 4 மணி | 06-10-2024 | District News | Dinamalar

தர்மபுரி மாவட்டம் அரூர் மாங்குப்பம் ஏரி பகுதியில் மயானம் உள்ளது. இப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை ஏரியை சுற்றி புதைக்கின்றனர். விவசாய பயன்பாட்டிற்காக ஏரியில் வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. மண் கடத்தல் மாபியா கும்பல் இரவு நேரங்களில் ஏரியை சுற்றிலும் டிப்பர் லாரிகளில் மண் அள்ளி விற்பனை செய்து வருகிறது. இதனால் மயானத்தில் உடல்களை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மண் அள்ளுவதால் எலும்பு கூடுகள் வெளியேறுகின்றன. மண் கடத்தல் மாபியா கும்பல் மீது வருவாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை