மாவட்ட செய்திகள் | 07-11-2024 | District News | Dinamalar
உடுமலை நகராட்சி கூட்டம் தலைவர் மத்தீன் தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும், தி.மு.க நகரச்செயலாளரும், 33 வது வார்டு கவுன்சிலருமான வேலுசாமி பேசினார். உடுமலை நகராட்சி சார்பில் தலைவர்கள் பூங்கா, ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் கயல்விழி பெயர் வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்காத கலெக்டர், அ.தி.மு.க., எம்.எல்.ஏ பெயர்கள் கல்வெட்டில் இடம் பெற்றது எப்படி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர் மத்தீன் மாவட்ட நிர்வாகம் அழைப்பிதழ், கல்வெட்டு தயாரித்ததால், குழப்பம் ஏற்பட்டது. அவர் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது, என பேசி சமாதானம் செய்தார்.
நவ 07, 2024