மாவட்ட செய்திகள் | 08-11-2024 | District News | Dinamalar
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்காக தீயணைப்புத்துறை மீட்புபணி குழு சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அலுவலக தீயணைப்பாணை உபயோகிக்கும் முறை குறித்து தூய்மை பணியாளர்களுக்கு விளக்கினர். பேரிடர் சமயங்களில் தீயணைப்பு பணியாளர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள், தீ விபத்தில் சிக்கித் தவிக்கும் பொது மக்களை காப்பாற்றுவது, நச்சுப்புகை விபத்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் உடை அணிந்து காப்பாற்றுவது குறித்து அவிநாசி தீயணைப்புதுறை மீட்புக் குழு நிலைய ஆய்வாளர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் செய்து காட்டினர்.
நவ 08, 2024