உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் | 10-11 -2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 10-11 -2024 | District News | Dinamalar

தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக்கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி சிலம்பாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிறப்பு சிலம்பாட்ட போட்டி புத்தூர் பிஷப்ஹீபர் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பூர்ணபுஷ்கலா போட்டிகளை தொடங்கி வைத்தார். ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான் கொம்பு அலங்கார சிலம்பம் மற்றும் தொடு சிலம்பம் ஆகிய பிரிவுகளில் போட்டி நடந்தது. கேடட், மினி கேடட், 15 வயதிற்கு உட்பட்டோர், 16 வயதிற்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளில் 400 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ