மாவட்ட செய்திகள் 4 மணி | 24-11-2024 | District News | Dinamalar
ராமநாதபுரம் மாவட்டம் ரோஸ்மா நகர் பகுதி கடற்கரையிலிருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட ரெட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தியும், அதிக சக்தியுடன் கூடிய குடிரை திறன் இஞ்சின் பயன்படுத்தி மீன்பிடித்ததை ரோஸ்மா நகர் பகுதி மீனவர்கள் பார்த்தனர். கடலுக்குள் சென்று 2 படகுகளை தடுத்து நிறுத்தி தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்பிற்கும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. காடலோர காவல் படையினர் மற்றும் ரோஸ்மா நகர் போலீசார் 2 மாவட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என ரோஸ்மா நகர் மற்றும் மூக்கையூர் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். போலீசார் இருதரப்பு மீனவர்களையும் சமாதானம் செய்தனர். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இனி தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது என தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.