இந்தியா-வங்கதேச உறவு 10ம்தேதி முக்கிய பேச்சு iskcon ban bangladesh violence
இந்தியா-வங்கதேச உறவு 10ம்தேதி முக்கிய பேச்சு iskcon ban bangladesh violence Indian Foreign Secretary Vikram Misri muhammad yunus Shafiqul Alam வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கலவரத்துக்கு பிறகு, சிறுபான்மையினரான இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அரசு வேலையில் உள்ள இந்துக்கள் மிரட்டப்பட்டு, ராஜினாமா செய்ய வைக்கப்பட்டனர். இதையடுத்து, இந்துக்கள் உரிமைக்காக ஒன்றுதிரண்டு போராடத் துவங்கினர். போராட்டத்தை தலைமை வகித்து நடத்திய இஸ்கான் கிருஷ்ண பக்தி இயக்கத்தை சேர்ந்த துறவி கிருஷ்ண தாஸ் பிரபு சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து இஸ்கான் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் கிருஷ்ணதாஸ் பிரபுவுக்கு மருந்து மாத்திரைகளை கொடுக்கச் சென்ற மேலும் 2 துறவிகளையும் வங்கதேச போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணதாஸ் பிரபுவுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் யாரும் முன்வராத நிலையில், ஜாமினிலும் வெளிவர முடியாத நிலையில் உள்ளார். பயங்கரவாதிகளை போல வங்கதேச அதிகாரிகள் தங்களை நடத்துவதாக, இஸ்கான் அமைப்பினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், துறவி கிருஷ்ணதாஸ் பிரபு உள்ளிட்ட இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த 17 பேரின் வங்கிக் கணக்குகளை வங்கதேச அதிகாரிகள் முடக்கி வைத்தனர். இதனால் இஸ்கான் அமைப்பை தடை செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் டாக்கா ஐகோர்ட்டில் இஸ்கான் அமைப்பை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்திய டிவிக்களை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை கேட்டு இன்னொரு வழக்கும் தொடரப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசின் செயலாளர் ஷஃபிகுல் ஆலம் கூறுகையில், இஸ்கான் அமைப்பை தடை செய்யும் எண்ணம் இல்லை என்றார். நாட்டை பிளவுப்படுத்த சில சக்திகள் முயற்சி செய்கின்றன. தவறான தகவல்களை பரப்புகின்றன. நாடு மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறது. தேச ஒற்றுமையை வலியுறுத்தி அனைத்து கட்சிகளுக்கும் மிக விரைவில் முகமது யூனுஸ் வேண்டுகோள் விடுப்பார் என்றார். பைட் ஷஃபிகுல் ஆலம் முகமது யூனுஸ் செயலாளர் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க முகமது யூனுஸ் தவறிவிட்டதாக, முன்னாள் பிரதமர் ேஷக் ஹசீனா குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு, அவரது ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்; பல ஆயிரம் பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டது என்றார். பைட் ஷஃபிகுல் ஆலம் முகமது யூனுஸ் செயலாளர் இந்து துறவி கிருஷ்ணதாஸ் பிரபு கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இரு நாடுகளிடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வரும் 10ம்தேதி இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி முகமது யூனுசுடன் பேச்சு நடத்த வங்கதேசம் செல்கிறார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபற்றி கேட்டதற்கு, இரு நாடுகளிடையே உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படும். இரு நாட்டு உறவு மேம்படும் என, ஷஃபிகுல் ஆலம் நம்பிக்கை தெரிவித்தார்.