/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் 4 மணி | 13-12-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் 4 மணி | 13-12-2024 | District News | Dinamalar
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பென்சல் புயல் காரணமாக பெருமளவு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. தேங்கிய தண்ணீரை வடிய வைத்து நெற்பயிர்களை காப்பாற்றிய விவசாயிகளுக்கு அடுத்த இடியாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட நெம்மேலியில் பயிரிடப்பட்டுள்ள 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வீணாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெம்மேலி பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
டிச 13, 2024