மாவட்ட செய்திகள் | 28 - 12 -2024 | District News | Dinamalar
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவருடைய சகோதரி மீனாகுமாரி. இவர்களது உறவினரான சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியும், திமுக மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளருமான பிரபாவதியின் திருமணத்திற்கு 50 பவுன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்கள் கடையில் கடனாக புவனேஸ்வரி வாங்கி கொடுத்தார். இதற்கான பணத்தில் பாதி தொகையை 12 வருடங்களாக திருப்பி தரைவில்லை. பணத்தை கேட்டு காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள பிரபாவதி வீட்டிற்கு மீனாகுமாரி மற்றும் புவனேஸ்வரி சென்றனர். பணம் கேட்டு வந்த மீனாகுமாரி மற்றும் புவனேஸ்வரியை, பிரபாவதியும், திமுக இளைஞரணி நிர்வாகியான தம்பி சுதாகரும் சேர்ந்து தாக்கினர். இதில் புவனேஸ்வரிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. புவனேஸ்வரி காரைக்குடி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார். வடக்கு காவல் போலீசில் சுதாகர் மற்றும் பிரபாவதி மேல் புவனேஸ்வரி புகார் கூறினார். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி தாக்கியதில் டிரைவர் பாண்டி மற்றும் பிரபாவதியின் தாயார் மனோரஞ்தத்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் மேலும் அரசுப்பணியில் இருந்து கொண்டு கட்சியி்ல் பணியாற்றுவதாகவும் பணியாற்றுவதாக சுதாகர் கொடுத்த புகாரின் பேரில், மீனாகுமாரி, அவரது கணவர் நிருஞ்சிராஜ் மற்றும் புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்தனர்.