/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் 4 மணி | 18-01-2025 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் 4 மணி | 18-01-2025 | District News | Dinamalar
சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் தனியார் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த தாம்பரத்தை சேர்ந்த ஈஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை டூவீலரில் வந்த மர்ம நபர் பறித்தார். சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரி தாலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் 5 பவுன் செயினை மட்டும் பறி்த்து கொண்டு தப்பினார். தாலி மட்டும் தப்பியது. ஈஸ்வரி சேலையூர் போலீசில் புகார் கூறினார். போலீசார் விசாரணையை தொடங்கிய சில மணி நேரத்தில் அதே பகுதி மற்றும் தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி மறைமலைநகர் என அடுத்தடுத்து 8 இடங்களில் கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.
ஜன 18, 2025