/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 25-01-2025 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 25-01-2025 | District News | Dinamalar
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாமலைநகர் மற்றும் ராம்நகர் பகுதியில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சமீப காலமாக கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. சில மாதம் முன்பு தனியார் வங்கி மேளாளர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்படும் டூவீலர்களும் கொள்ளை போனது. அப்பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை கும்பல் உடைத்தது. இப்பகுதியில் போலீசார் இரவு ரோந்து செல்ல வேண்டும். சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். சிசிடிவி கேமிராக்களை உடைத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தினர்.
ஜன 25, 2025