செய்தி சுருக்கம் | 08 AM | 27-08-2024 | Short News Round Up | Dinamalar
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கா முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். முன்னதாக, முதல்வர் நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளை செய்வதற்காக தொழில்துறை அமைச்சர் ராஜா அமெரிக்கா சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினுடன், அவரது செயலர் உமாநாத், தொழில்துறை செயலர் அருண்ராய், வழிகாட்டி அமைப்பின் மேலாண் இயக்குனர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் செல்ல உள்ளனர். இன்று இரவு அமெரிக்கா செல்லும் முதல்வர், அடுத்த மாதம் 14ம் தேதி சென்னை திரும்புகிறார். அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்க உள்ளார். பல்வேறு நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. தமிழ் சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார். அமெரிக்கா செல்லும் முன் பத்திரிகையாளர்களை சந்தித்து பயண விபரத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என அதிகாரிகள் கூறினர்.