உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்திசுருக்கம் | 08 AM | 15-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் | 08 AM | 15-11-2024 | Short News Round Up | Dinamalar

சபரிமலை நடை மண்டல கால பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். நாளை முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்யும் மேல் சாந்திகளை அழைத்து வந்து அபிஷேகம் நடத்தி முறைப்படியாக பதவி ஏற்க செய்யும் நிகழ்வு நடைபெறும். மற்ற விசேஷ பூஜைகள் கிடையாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக பம்பை மணல் பரப்பில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நிலக்கல் அல்லாமல் பம்பை ஹில் டாப் மற்றும் சக்குப்பாலத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் பக்தர்கள் மழை நேரத்தில் படும் சிரமங்களை தடுப்பதற்காக வடக்கு பகுதியில் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் டின் அரவணை தற்போது இருப்பில் உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் .

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை