செய்தி சுருக்கம் | 01 PM | 16-12-2024 | Short News Round Up | Dinamalar
1971ம் ஆண்டு வங்கதேசம் தனிநாடாக பிரிந்தது. தனது சொந்த குடிமக்களாகிய வங்காளிகளை படுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம். சொந்த நாட்டில் விடுதலைக்காக சண்டையிட்ட மக்களுடன் இணைந்து போரிட்டு, அவர்களுக்கான விடுதலையையும் இந்திய ராணுவம் பெற்றுத்தந்தது. இந்த நாள் விஜய் திவாஸ் என ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. விஜய் திவாசை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில், 1971 போரின் போது அடங்காத துணிச்சலை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த நமது வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ஒரு நன்றியுள்ள தேசம் நமது துணிச்சலான இதயங்களின் இறுதி தியாகத்தை நினைவுகூர்கிறது.