செய்தி சுருக்கம் | 01 PM | 23-12-2024 | Short News Round Up | Dinamalar
கோவை பீளமேடு அடுத்த வினோபாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டில் துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்கள் இருந்தன. கோவையைச் சேர்ந்த மணிகண்ட பிரபு ( 22), ஹரி ஸ்ரீ (23), பீகாரை சேர்ந்த குந்தன் ராஜ் (22) ஆகியோர் அந்த வீட்டில் இருந்தனர். மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்ட பிரபு ஒரு இந்து அமைப்பின் பொறுப்பாளராக இருப்பதும், ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிவதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. பீகார் மாநிலத்திற்கு சென்று இவர்கள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கி வந்துள்ளனர் எதற்காக துப்பாக்கி வாங்கினர்? ஏதேனும் சதித் திட்டம் தீட்டி உள்ளார்களா ? என கோவை பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு நெருங்கி வரும் சூழலில், துப்பாக்கியுடன் 3 இளைஞர்கள் பிடிபட்ட சம்பவம் கோவை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.