/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 21-02-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 21-02-2025 | Short News Round Up | Dinamalar
தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்துள்ளார். ஸ்டாலின் கடிதத்துக்கு மத்திய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்வி கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது தவறு. நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம். எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஸ்டாலின் கடிதத்தை நல்லெண்ணத்துடன் எழுதவில்லை. அந்தக் கடிதத்தின் மூலம் சில கற்பனையான கவலைகளைக் குறிப்பிட்டுள்ளார் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பிப் 21, 2025