உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 31-03-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 31-03-2025 | Short News Round Up | Dinamalar

பிரதமர் மோடியின் தனி செயலராக இளம் பெண் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2014 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி உபி வாரணாசி அருகே உள்ள மெஹ்முர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு வரும் முன் வணிக வரி துறையில் துணை ஆணையராக பணியாற்றினார். தனது பணியை தொடர்ந்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2013 சிவில் சர்வீஸ் தேர்வில் 96 வது ரேங்க் எடுத்தார். ஐஎப்எஸ் பயிற்சியின் போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான கோல்டு மெடல் வாங்கியுள்ளார். பிரதமர் அலுவலக பணியில் 2022ல் சேர்ந்தார். முன்னதாக வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றிய காலத்தில், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றி வந்தார். 2023 ஜனவரி 6 முதல் பிரதமர் அலுவலகத்தின் துணை செயலராக பதவி வகித்து வருகிறார்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை