உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 12-04-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 12-04-2025 | Short News Round Up | Dinamalar

1980ல் தொடங்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, 1984 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, வெறும் 2 எம்.பிக்களை மட்டுமே பெற்றது. 1989ல் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்துடன், சில மாநிலங்களில் மறைமுகமாக கூட்டணி வைத்தது. அப்போது 85 இடங்களை கைப்பற்றி தேசிய அரசியலில் முதல் முறையாக பாஜ அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அந்த தேர்தலில், பா.ஜ ஆதரவுடன்தான் வி.பி.சிங் பிரதமரானார். அதன்பின் 1991, 1996 லோக்சபா தேர்தல்களில் பா.ஜவுக்கு ஏறுமுகம் என்றாலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க சிவசேனா தவிர, எந்த கட்சியும் முன்வரவில்லை. 1996ல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பின், வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது.

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ