செய்தி சுருக்கம் | 08 PM | 22-04-2025 | Short News Round Up | Dinamalar
மத்திய அரசு தேர்வாணையம், இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வானது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும். கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் நிலைத்தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்முகத்தேர்வும் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கிறது. தேர்வை எழுதியவர்களில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் எனும் மாணவர் இந்திய அளவில் 23வது இடத்தை பிடித்தும், தமிழகத்தில் முதலிடத்திலும் தேர்வாகி உள்ளார். இந்திய அளவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சக்தி துபே என்பவர் முதலிடத்தை பெற்றிருக்கிறார். ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தையும், டோங்கரே அர்ச்சித் பராக் 3ஆம் இடத்தையும் பிடித்து உள்ளனர்.