செய்தி சுருக்கம் | 08 AM | 13-06-2025 | Short News Round Up | Dinamalar
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளுங் கட்சியான திமுக தரப்பில் தேர்தல் பணிகள் தற்போதே துவக்கப்பட்டுள்ளன. திமுக பொதுக்குழுக் கூட்டம், கடந்த 1ம்தேதி, மதுரையில் நடந்தது. அதில் தேர்தலுக்கு தயாராக, கட்சி நிர்வாகிகளை, சட்டசபை தொகுதி வாரியாக சந்திப்பேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அடுத்து திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஓரணியில் தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளர்களில், குறைந்தபட்சம் 30 சதவீதம் பேர் தி.மு.க., உறுப்பினர்களாக இருக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகளை அறிய, தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பை துவங்க இருக்கிறேன். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும்போது உங்களை சந்தித்து மகிழ்வேன் என, தெரிவித்திருந்தார். அக்கடிதத்தின் அடிப்படையில் கழக உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் இன்று முதல் 234 சட்டசபை தொகுதிகளின், திமுக நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.