செய்தி சுருக்கம் | 08 AM | 08-07-2025 | Short News Round Up | Dinamalar
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால், ஆட்சியை தக்க வைப்பதற்கான தீவிர முயற்சியில் தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை பொறுப்பாளர்களாக தி.மு.க., தலைமை நியமித்து உள்ளது. தொகுதி நிலவரம், வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளின் செயல்பாடு குறித்து கண்காணிக்க, ஐபேக், பென் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது. இதில், பென் நிறுவனம் மூலம் தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்புகள் குறித்து, சட்டசபை தொகுதி வாரியாக, இரண்டு மாதங்களாக அலசி ஆராயப்பட்டுள்ளது. இதில், 100 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி பலம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.