செய்தி சுருக்கம் | 01 PM | 13-09-2024 | Short News Round Up | Dinamalar
அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன. இந்நிலையில் இன்று ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவனம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை முதல்வரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.