செய்தி சுருக்கம் | 01 PM | 27-06-2024 | Short News Round Up | Dinamalar
பார்லிமென்டில் நடந்த கூட்டு கூட்டத்தில் இன்று ஜனாதிபதி முர்மு உரையாற்றினார். 18வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்.பி.,க்கள் மற்றும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கும் வாழ்த்து கூறினார். பார்லிமென்ட் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தியதாவது: பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 60 ஆண்டுக்கு பின் ஆட்சியில் இருக்கும் அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அரசின் மீது மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முடியும். மக்களின் நம்பிக்கையை இந்த அவை நிறைவேற்றும். மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடைபோட்டு கொண்டிருக்கிறோம். இந்தியா பற்றிய உலகின் பார்வை மாறியுள்ளது. இத்தாலியில் நடந்த ஜி7 மாநாட்டில்இந்தியாவின் முக்கியத்துவம் வெளிப்படையாக தெரிந்தது. அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பிறகும் நாட்டில் அதை உடைக்கும் முயற்சி நடந்தது. 50 ஆண்டுக்கு முன் இதே நாளில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.