உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 23-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 23-08-2024 | Short News Round Up | Dinamalar

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிரங்கிய ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளை மிகுந்த பெருமையுடன் நினைவுகூர்கிறோம். நமது விண்வெளித்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் போற்றும் நாள். நமது அரசு விண்வெளித் துறை தொடர்பான தொடர்ச்சியான எதிர்கால முடிவுகளை எடுத்துள்ளது. மேலும், வரும் காலங்களில் நாம் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை