/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 27-10-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 27-10-2024 | District News | Dinamalar
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் முருகன் வயது 38. புதுச்சேரியில் உள்ள ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் இருந்து 21 டன் சோப்பு பெட்டிகளை ஏற்றி கேரளா திருச்சூர் நோக்கி சென்றார். கடந்த 23ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் லாரியை நிறுத்தினார். மழை காரணமாக லாரி மேல் தார்பாயை சரிசெய்ய முயன்றபோது தார்பாய் கிழிந்து 100 சோப்பு பெட்டிகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றின் மதிப்பு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க முருகன் சென்றார். ஆனால், போலீசார் புகாரை ஏற்கவில்லை.
அக் 27, 2024