/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 28-11-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 28-11-2024 | Short News Round Up | Dinamalar
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி துவங்கியது. அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேச வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முடங்கின. அதேபோல் நேற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியை தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பார்லிமென்டின் இரு அவைகளும் துவங்கியது. லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா, வசந்தராவ் சவுதான் ஆகியோர் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
நவ 28, 2024